சாத்தான்குளம் அருகே தொடர் மழைக்கு சரிந்த மின்மாற்றி - மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சீரமைத்தனர்

வடக்கு அமுதுண்ணாக்குடியில் மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பழுதான மின்மாற்றி சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் பெய்த மழையால் அந்த மின்மாற்றியின் அடிப்பகுதி பெயர்ந்து சரிந்து நின்றது.
சரிந்த நிற்கும் மின்மாற்றியை படத்தில் காணலாம்.
சரிந்த நிற்கும் மின்மாற்றியை படத்தில் காணலாம்.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு அமுதுண்ணாக் குடியில் மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பழுதான மின் மாற்றி சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் சாத்தான்குளம் பகுதியில் தொடர் மழை பெய்தது. இதில் அந்த மின் மாற்றியின் அடிப்பகுதி பெயர்ந்து சரிந்து நின்றது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மின் கம்பம் சரிந்து நிற்பது சமூக வலை தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு சரிந்த நின்ற மின் மாற்றியை சீரமைத்தனர். மேலும் மழை நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பழுதான மின் மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுத்து மின் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com