சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளது.வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
Published on

வேலூரில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜா. இவர் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் இன்ஸ்பெக்டர் ராஜா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா மீது அடுக்கடுக்காக புகார் எதிரொலி காரணமாக இன்ஸ்பெக்டர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com