தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் பயிற்சி பட்டறை

நிகழ்ச்சியில் கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவர் பெல்லா அன்ன ஜோதி கணினியின் தோற்றம் முதல் கணினியில் தமிழ் பயன்பாடு வரை காணொலி காட்சி மூலம் மாணவர்களிடையே பேசினார்.
தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் பயிற்சி பட்டறை
Published on

வள்ளியூர்:

தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு மற்றும் அகத்தரமதிப்பீட்டு குழு சார்பில் இணையமும் இன் தமிழும் என்ற பொருண்மையில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தலைமை உரையாற்றி னார். கல்லூரி முதல்வர் து.ராஜன் முதல்வர் உரையும், அகத்தர மதிப்பீட்டுகுழுவின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் நோக்க உரையும் வழங்கினர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை கே.செல்வகுமார், தமிழ்த்துறை தலைவர் த.நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவின் தலைவர் சு.கிரிஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவர் பெல்லா அன்ன ஜோதி கணினியின் தோற்றம் முதல் கணினியில் தமிழ் பயன்பாடு வரை காணொலி காட்சி மூலம் மாணவர்களிடையே பேசினார்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் செ.சோனா கிறிஸ்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com