பேராவூரணியில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

பேராவூரணி வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.எண்ணும் எழுத்தும் பயிற்சி மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத அளிக்க வேண்டிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பேராவூரணியில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
பேராவூரணியில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
Published on

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேராவூரணி வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் அங்கையர்கண்ணி, கலாராணி ஆகியோர் பார்வையாளராக கலந்து கொண்டனர்.

ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பால்ராஜ் பார்வையிட்டு கருத்துரை வழங்கினார்.

பேராவூரணி வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத அளிக்க வேண்டிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.

ஜன 2 முதல் 4 ந்தேதி வரை நடைபெற்ற பயிற்சியில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 105 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com