கடலூர் அருகே சோகம் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை

கலையரசன் (வயது 23). ராஜஸ்ரீ (வயது 21) இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகி உள்ளது கலையரசன் மது குடிப்பதை ராஜஸ்ரீ கண்டித்துள்ளார்.. இதனால் மனமுடைந்த கலையரசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார்‌
கடலூர் அருகே சோகம்    மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த அரிசி பெரியங்குப்பம் சேர்ந்தவர் கலையரசன் (வயது 23). ராஜஸ்ரீ (வயது 21) இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகி உள்ளது. இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று கலை யரசன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கலையரசன் மது குடிப்பதை ராஜஸ்ரீ கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கலையரசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார். இதனை தொடர்ந்து கலையரசனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர்ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com