கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்குளம் பகுதியில் கந்தசாமிபிள்ளை மகள் ரேணுகா என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு செல்லும் சாலை பாதையை ஆக்கிரமிப்பு செய்தும் 10 சென்ட் வீட்டு மனை பட்டா இடத்தை கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அபகரித்து வருவதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர், சங்கராபுரம் தாசில்தார் ஆகியோரிடம் முறையிட்டும் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த திருநங்கை ரேணுகா மற்றும் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாததால் காவல்துறையின் தடையை மீறி சாலையில் அமர்ந்து அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com