போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை

தேவதானப்பட்டியில் போக்குவரத்து விதிகளை வாகனங்கள் மதிக்காததால் விபத்துகள் நடந்து வருகிறது.
எச்சரிக்கை அறிவிப்பை மீறி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்
எச்சரிக்கை அறிவிப்பை மீறி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்
Published on

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி காட்ரோடு பகுதி கொடைக்கானல் மும்முனை சந்திப்பில் உள்ளது.

இங்கிருந்து கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை மற்றும் பெரியகுளம், தேனி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகள். நிழற்குடை நிறுத்தத்தில் அரசு பஸ் மற்றும் தனியார் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

போலீசார் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதை மீறி அவ்விடத்தில் லாரி, ஷேர் ஆட்டோக்கள், மற்ற வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வாகனங்களில் ஏறுவதற்கு தடையாக உள்ளது.

எனவே போக்குவரத்து விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com