கோவில்பட்டி நகருக்கு போக்குவரத்து ஆய்வாளர் நியமிக்க வேண்டும் -தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் கோரிக்கை

கோவில்பட்டி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டி நகரில் சுமார் 1½ லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர்.
கோவில்பட்டி நகருக்கு போக்குவரத்து ஆய்வாளர் நியமிக்க வேண்டும் -தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் கோரிக்கை
Published on

கோவில்பட்டி:

தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற கோவில்பட்டி நகர தலைவர் எம்.மைக்கேல் அமலதாஸ் செய்தியாளரிடம் கூறிய தாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகரமாகும். கோவில்பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.

கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, பூசாரிபட்டி, வடக்கு, தெற்கு திட்டக்குளம் மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாண்ட வர்மங்கலம், மந்திதோப்பு, தோணுகால்,

சாலைப்புதூர், ஆவல்நத்தம், அய்யனேரி, வெங்கடாசலபுரம், புளி யங்குளம், பாறைப்பட்டி, கிருஷ்ணா நகர், சுபா நகர், கணேஷ் நகர், ராஜகோபால் நகர், பல்லக்கு ரோடு, சண்முக சிகாமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 30 கிராமங்களில் இருந்தும் தினசரி பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் கோவில்பட்டி நகருக்குள் வந்து செல்கின்றனர்.

இதனால் அவ்வபோது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்களால் உயிர் பலியும் ஏற்படுகிறது. கோவில்பட்டி நகரில் சுமார் 1½ லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இங்கு டி.எஸ்.பி அலுவலகம், கிழக்கு, மேற்கு போலீஸ் நிலையம், போக்குவரத்து பிரிவு மகளிர் போலீஸ் நிலையம், மதுவிலக்கு என பல போலீஸ் நிலையங்கள் உள்ளன. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் பொது மக்களின் நலன் காத்திடவும், விபத்து மற்றும் குற்றசெயல்களை தடுத்திடும் வகையிலும் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

பெருகி வரும் வாகன போக்குவரத்தை கணக்கில் கொண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளரை உடன டியாக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com