பரங்கிமலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.போக்குவரத்து மாற்றங்கள் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
பரங்கிமலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
Published on

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் நாளை (21-ந்தேதி) முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்லலாம். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.கே.என். ரோடு மற்றும் ரெயில் நிலைய சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மவுண்ட் போஸ்ட் ஆபிஸ் நோக்கி செல்ல அனுமதி இல்லை.

ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலையில் செல்வதற்கு வலதுபுறமாகவோ அல்லது இடப்புறமாகவோ செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com