முத்துகிருஷ்ணபேரியில் வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா - நாளை நடைபெறுகிறது

முத்துகிருஷ்ணபேரியில் முப்பெரும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) பெருமாள் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. ஆர்.கே.காளிதாசன், எஸ்.எம். நாராயண நாடார், நடராஜன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
டி.பி.வி. வைகுண்டராஜா
டி.பி.வி. வைகுண்டராஜா
Published on

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ண பேரியில், வட்டார வியாபாரிகள் சங்க 5-ம் ஆண்டு தொடக்க விழா, சங்க கொடி ஏற்று விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) பெருமாள் கோவில் திருமண மண்டபத்தில் நடை பெறுகிறது.

நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி மண்டலத் தலைவரும், தென்காசி மாவட்டத் தலைவருமான டி.பி.வி. வைகுண்டராஜா தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ரம ராஜா சங்க கொடியேற்றுகிறார். எஸ்.எம்.என். ஹரிகிருஷ்ணன், எம்.ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கே.காளிதாசன், எஸ்.எம். நாராயண நாடார், நடராஜன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

மேலும், இஸ்மாயில், திவ்யா ரங்கன், அய்யப்பன், சின்னதுரை, செல்வராஜ், சோலையப்பராஜா, காமராஜ் நாடார், ஜெயபாலன், கணேசன், காஜாமுகைதீன், நயன் சிங், ஐ.வி.என். கலைவாணன், அசோ கன், குணசேகரன், காமராஜ், ரத்தினசாமி, உதயராஜ், பால சுப்பிர மணியன், நாராயண சிங்கம், பரமசிவன், முருகன், இசக்கி, விஜய்சிங், சண்முகசுந்தரம், முத்துவேல், வேல்சாமி, சிவன் பாண்டியன், ஆறுமுகம் ஆகி யோரும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

சிவபெருமாள், ராம கிருஷ்ணன், வைத்திலிங்கம், செல்வம், செயற்குழு உறுப்பி னர்கள் பரமசிவன், தங்கராஜ், பொன்னுதுரை ஆகியோர் நன்றி கூறுகின்றனர்.

ஏற்பாடுகளை சுதர்சன், சங்கரநாராயணன், விஜய முருகன், மாணிக்கராஜா, மதன்ராஜ், சுப்பிரமணியன், செந்தில்குமார், மாரியப்பன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com