மங்கலம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மங்கலம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மங்கலம் சாலையில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என 2 முறை நோட்டீஸ் வழங்கினர். இருந்தபோதிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு ஒரு சில கடைக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com