பென்னாகரம் அருகே குட்கா விற்பனை செய்த வியாபாரி கைது

மோட்டார் சைக்கிள் பறிமுதல் போலீசார் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள். 
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள். 
Published on

பென்னாகரம், 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பளிஞ்சரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மோகன் (வயது 27).

இவர் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதி மளிகை கடைகளுக்கு மளிகை பொருட்களை 3 சக்கர ஆட்டோ மூலம் விற்பனை செய்து வருகிறார். இவர் சுற்று வட்டாரம் மளிகை கடைகளுக்கும் குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் விற்பனை செய்வதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் பெயரில் பென்னாகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கோவிந்தசாமி, கோவிந்தன் உள்ளிட்டோர் ரகசியமாக கண்காணித்தனர்.இதையறிந்த தலைமறைவாக மோகனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து குட்கா விற்பனைக்காக பயன்படுத்தி வந்த 3 சக்கர ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைதான மோகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com