தியாகதுருகம் அருகே மொபட் மீது டிராக்டர் மோதல்; கணவன்-மனைவி படுகாயம்

தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அய்யாசாமி மற்றும் செல்வி ஆகி யோர் படுகாயம் அடைந்தனர்.
தியாகதுருகம் அருகே  மொபட் மீது டிராக்டர் மோதல்; கணவன்-மனைவி படுகாயம்
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 67) விவசாயி, இவர் சம்ப வத்தன்று தனது மனைவி செல்வி (45) என்பவருடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பல்லகச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டர் இவரது பொபட் மீது மோதியது. இதில் அய்யாசாமி மற்றும் செல்வி ஆகி யோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தி னர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அய்யாசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com