கொடநாட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர்.
கொடநாட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இதமான கால நிலை நிலவி வருகிறது. இதனால் தீபாவளி விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒரு முக்கிய தலமாக கோத்தகிரி கொடநாடு காட்சி முனை இருந்து வருகிறது.

இங்கு இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கர்நாடக மாநில மலைததொடர் மற்றும் பள்ளத்தாக்குகள், பவானிசாகர் அணை காட்சி, தெங்குமரஹாடா காட்சி போன்ற முனைகளும், இதமான காலநிலைக்கேற்ப நல்ல சீதோஷ்ண நிலையை அனுபவிக்கலாம்.

இதனால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளான கர்நாடக, கேரளா, பிற மாநில, மாவட்ட மக்கள் குவிந்து இயற்கை அழகினையும், சுற்றுலா தலங்களையும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com