காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை

நிலக்கோட்டையில் காதல் திருமணம் செய்த மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய 7 பேர் மீது வழக்கு
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அம்பேத்கார் நகரைச் சேர்ந்த கோபால் மகள் பிரியா (வயது 22). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் நாகராஜ் (27) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களிலேயே இவர்களது காதல் கசந்து விட்டது.

தனது பெற்றோரின் பேச்சைக் கேட்டு மனைவியிடம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கணவர் கொடுமைபடுத்த தொடங்கினார். அதனை வாங்கி வர மறுத்ததால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடுமாறும், தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாகவும் நாகராஜ் கூறினார்.

10 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி கணவர் நாகராஜ் உறவினர்கள் அம்சவள்ளி, முருகன், கலா, சரவணக்குமார், பஞ்சவர்ணம், ராஜ்குமார் ஆகியோர் தினசரி கொடுமைபடுத்தி வந்தனர். இது குறித்து நிலக்கோட்டை அனைத்து  மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரியா புகார் அளித்தார்.

அதன் பேரில் சப்இன்ஸ்பெக்டர் லதா வரதட்சணை கொடுமை படுத்திய கணவர் நாகராஜ் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com