அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

கோவையில் அரசு கலைக்கல்லூரிகளில் சேர 25 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.
அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
Published on

கோவை:

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது.

நடப்பாண்டில், கல்லூரியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது.இதனை யடுத்து, பி.ஏ.பி. காம். பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்பங் களை சமர்ப்பிக்க கடந்த 8-ம் தேதி வரை கடைசி என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சி.பி.எஸ்.இ. பள்ளி தேர்வு முடிவுகள் வராத தால், கால அவகாசம் நீடிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் நாளை (புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு தற்போது வரை சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

கல்லூரிக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகா சம் இருப்பதால் இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி தெரிவித் துள்ளார்.

மேலும், கல்லூரி யில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்காக இலவச விடுதி வசதியும் செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com