தக்காளி விலை திடீர் உயர்வு

30-க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகள் செயல்பட்டு வருகிறது.தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.
தக்காளி விலை திடீர் உயர்வு
Published on

அரூர்,

தருமபுரி மாவட்டம் அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த பகுதி விவசாயி களிடம் கொள்முதல் செய்து தக்காளி களை பெட்டிகளில் அடுக்கி சென்னை, பெங்களூர், கோவை, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

உள்ளூர் வியாபாரிகளும் மண்டிகளில் இருந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு 27 கிலோ பெட்டி தக்காளி ரூ.400 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com