கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை சீரமைத்து தரவேண்டும்

ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் வலியுறுத்தல் வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் விவாதங்கள் நடந்தது
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை சீரமைத்து தரவேண்டும்
Published on

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மாதாந்திர கூட்டம் அலுவலக மன்ற கூடத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் ஆராஞ்சி ஏ.எஸ் ஆறுமுகம், சாந்தி கண்ணன், துணை தலைவர் வாசுகி ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமேலழகன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில், ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், ஒன்றிய வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் விவாதங்கள் நடந்தது.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கர், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, குப்புசாமி, அனுராதாசுகுமார், பாரதி, மணிமேகலை சேகர், புஷ்பா சதாசிவம், மகேஸ்வரி சங்கர் உள்ளிட்டவர்கள் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் சுகாதாரத்தை சீர் கெடாமல் பாதுகாக்கும் நோக்கில், ஒன்றியத்திற்கு தேவை அடிப்படை வசதிகளை உடனடியாக விரைந்து செயல்படுத்திடவேண்டும் என விவாதித்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) காந்திமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பரிமளா, கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com