63 நாயன்மார்கள் வீதி உலா

திருவண்ணாமலை தீபதிருவிழாவையொட்டி நடந்தது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
63 நாயன்மார்கள் வீதி உலா
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது. 6-வது நாளான இன்று விநாயகர், சந்திரசேகரர், மூஷிக வாகனம், வெள்ளி யானை வாகனத்தில் மாடவீதியில் உலா வந்தார். தொடர்ந்து 63 நாயன்மார்களும் மாட வீதியில் பவனி வந்தனர்.

தொடர்ந்து இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளிரதம் வெள்ளி இந்திர விமானம் மற்றும் இதர வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.

5-வது நாளான நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம் வெள்ளி மயில் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com