சமையல் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது

சண்முக சுந்தரத்ைத கத்தியை காட்டி மிரட்டி ரூ.900-ஐ பறித்து சென்றார்.முகமது மீரானை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

கோவை மாவட்டம் அன்னூர் சாலையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் பல்லடத்தை அடுத்த அருள்புரம்- திருப்பூர் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் நேற்று காலை சாலையில் நடந்து சொல்லும்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் சண்முக சுந்தரத்ைத கத்தியை காட்டி மிரட்டி ரூ.900-ஐ பறித்து சென்றார்.

இது குறித்து பல்லடம் போலீசில் சண்முக சுந்தரம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த அபுதாகீர் மகன் முகமது மீரான்(வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து முகமது மீரானை போலீசார் கைது செய்து, பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com