குடிமங்கலத்தில் விவசாயிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி

இலவச மின்சாரத்திற்கு போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியவர்களை படத்தில் காணலாம்  
தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியவர்களை படத்தில் காணலாம்  
Published on

குடிமங்கலம் :

இலவச மின்சாரத்திற்கு போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள், திருப்பூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், அப்பிலியபட்டி பரமேஸ்வரன், ரமேஷ், வரதராஜபுரம் கிளை பொறுப்பாளர் ராஜகோபால், சுகுணா ரமேஷ், இராமச்சந்திரபுரம் ராஜ்குமார், செந்தில்குமார், முருகேஷ், கோவிந்தசாமி, சோமசுந்தரம், குமாரபாளையம் காவடி முருகேஷ், ராசு , நாச்சிமுத்து , சம்பத் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com