வேன் கவிழ்ந்து விபத்து

தனியார் நிறுவன வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சாய்ந்து கவிழ்ந்தது. 2 பேர் லேசான காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேன் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
வேன் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
Published on

 திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் சாலையில் உள்ள 63 வேலம்பாளையம் பகுதியில் இன்று காலை பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லும் தனியார் நிறுவன வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சாய்ந்து கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.2 பேர் லேசான காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் வேனை அப்புறப்படுத்தினர்.

அதன்பிறகு போக்குவரத்து சீரானது. 

X

Maalai Malar
www.maalaimalar.com