வேளாண் விஞ்ஞானி எம். எஸ்.சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி

வான் மழை மாதாந்திர கூட்டத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக எம். எஸ்.சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
வேளாண் விஞ்ஞானி எம். எஸ்.சுவாமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்.
வேளாண் விஞ்ஞானி எம். எஸ்.சுவாமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்.
Published on

பல்லடம்:

பல்லடம் வனம் அறக்கட்டளையில் வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் மறைவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்று நடப்பட்டது. பின்னர் நடைபெற்ற வான் மழை மாதாந்திர கூட்டத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வனம் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக எம். எஸ்.சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியில் உள்ள சங்க அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதணன், பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம், மற்றும் சுப்பிரமணியம், பொருளாளர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com