பெருமாநல்லூரில் வியாபாரிகள் சங்க கூட்டம்

புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றிய ஆலோசனை நடைபெற்றது.அனைத்து வியாபாரி நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பெருமாநல்லூரில் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 
கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 
Published on

பெருமாநல்லூர் :

திருப்பூர்வடக்கு ஒன்றியம்அனைத்து வியாபாரி நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பெருமா நல்லூரில்நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.இதில் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நீர்மோர் பந்தல் அமைப்பது மற்றும் மே 5ந்தேதி வணிகர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றிய ஆலோசனை நடைபெற்றது.

இதில் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் கண்ணன், துணைச் செயலாளர் சரவணன், ஒருங்கிணை ப்பாளர் பாலா, ஆலோசகர் மூர்த்தி, துணைத் தலைவர் வேலுச்சாமி, துணைப் பொருளாளர் சண்முகம் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் கொண்டப்பன், கோபால், ஜெயக்குமார், சங்கமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com