தமிழ் வளா்ச்சித்துறையில் காலியாக உள்ள துணை இயக்குநா் பணியிடத்தை நிரப்ப வேண்டும் - அமைச்சரிடம் மனு

துணை இயக்குநா் பணியிடம் கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ளது.தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள துணை இயக்குநா் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் அனைத்து தொழிலாளா் நல அமைப்பு மாநிலச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையில் துணை இயக்குநா் பணியிடம் கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ளது. தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே திருப்பூா் வருகிறாா்.

திருப்பூா் மாநகா் மற்றும் புறநகரில் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திரையரங்கங்களில் தமிழில் பெயா் பலகை வைக்கப்படாமல் வீதிமீறல்கள் இருந்து வருகிறது. ஆகவே, காலியாக உள்ள தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் பணியிடத்தை நிரப்பி விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com