வேகமெடுக்கும் இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்த பேச்சு திருப்பூர் பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி

வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.ஆயத்த ஆடைகளுக்கு பிரிட்டனில், 9 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் 

இந்தியா - பிரிட்டன் இடையே, வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜூலை 29ல் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் பங்கேற்று, முக்கிய அம்சங்கள் குறித்து பேசினர்.

இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:- இந்திய ஆயத்த ஆடைகளுக்கு பிரிட்டனில், 9 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு வேகமெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.முக்கியமான, 15 அம்சம் குறித்து இரு நாட்டு தொழில் நுட்பக்குழுவினர் 85 அமர்வுகளில் பேசிஉள்ளனர்.வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக ஒப்பந்தத்தால், இந்திய ஆயத்த ஆடைகள், பிரிட்டன் சந்தையில் வரியின்றி இறக்குமதியாகும்.இதை சாதகமாக பயன்படுத்தி இந்திய ஏற்றுமதியாளர்கள், போட்டி நாடுகளை எளிதாக எதிர்கொண்டு, பிரிட்டனுக்கான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க செய்ய முடியும். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, பிரிட்டனிலிருந்து ஆர்டர் வருகை கண்டிப்பாக அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com