அவினாசி கோவிலுக்கு திருமுருகநாத சுவாமி வருகை நிகழ்ச்சி

திருமுருகநாத சுவாமி, அணைப்புதூரில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளினார்.அபிஷேகம், அலங்காரம் ஆகியவை திருமுருகநாத சாமிக்கு நடைபெற்றது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவிநாசி :

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.இதையொட்டி திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி, அணைப்புதூரில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளினார்.

அபிஷேகம், அலங்காரம் ஆகியவை திருமுருகநாத சாமிக்கு நடைபெற்றது. தொடர்ந்து அவிநாசி போஸ்ட் ஆபீஸ் வீதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஸ்ரீசந்திரசேகர சுவாமி, திருமுருகநாதரை எதிர்கொண்டு அழைக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.தொடர்ந்து பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள ஊமையஞ் செட்டியார் தண்ணீர் பந்தல் மண்டபத்தில் கட்டளைதாரர்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் திருமுருகநாத சுவாமி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com