தொழில் போட்டியில் கட்டிட மேஸ்திரிக்கு அரிவாள் வெட்டு

காயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.வடக்கு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் காலேஜ் ரோடு கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 35). இவர் கட்டிட மேஸ்திரி. இவருடன் கட்டிட தொழிலாளியாக மாஸ்கோ நகரை சேர்ந்த சரவணன் (35) என்பவர் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சரவணன், தனியாக சென்று கிருஷ்ணனுக்கு தெரிந்தவரிடம் இருந்து தனக்கு கட்டிட வேலை கொடுக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் தனது வேலைக்கு போட்டியாக சரவணன் செயல்படுவதை கிருஷ்ணன் கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லம்பாளையத்தில் கிருஷ்ணன் நின்றபோது அங்கு சரவணன் வந்துள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சரவணன், அரிவாளால் கிருஷ்ணனின் முதுகு, தொடை பகுதிகளில் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வடக்கு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com