பல்லடம் அருகே மளிகை கடை மேற்கூரையை பிரித்து பணம், மளிகை பொருட்கள் திருட்டு

மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் திருடி சென்றுள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயநந்தன் (வயது 37 ). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு இவரது மளிகை கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். கடையில் இருந்த குளிர் பானங்களையும் மர்ம நபர் எடுத்து குடித்துவிட்டு திருடிச் சென்றுள்ளார். வீட்டின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் வெளியே வரும்போது கடையின் கதவை உடைத்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயநந்தன் அவினாசிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com