பெருமாநல்லூரை குளிர்வித்த மழை

பெருமாநல்லூர் மற்றும் செங்கப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மாலை சுமார் பலத்த மழை பெய்தது.கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பெருமாநல்லூர் :

திருப்பூர் அடுத்துள்ள பெருமாநல்லூர் மற்றும் செங்கப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3.30 மணி முதல் 4.30 மணி வரை பலத்த மழை பெய்தது.

இதனால் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், பாண்டியன் நகர், பூலுவபட்டி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது பெய்துள்ள மழையினால் பூமி குளிர்ந்து, இதமான குளிர் காற்று வீசியது. இதனால் இந்த பகுதியில் குளிர்ச்சி நிலவியது. விவசாயிகள் வைகாசி பட்ட சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com