குடிநீர் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல் பீறிட்டு வெளியேறிய தண்ணீர்

இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது.நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது
நீர்வீழ்ச்சி போல தண்ணீர் வெளியேறிய காட்சி. 
நீர்வீழ்ச்சி போல தண்ணீர் வெளியேறிய காட்சி. 
Published on

அவினாசி :

திருப்மாவட்டம் அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சிகிருஷ்ணாபுரம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு செல்லும் இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பீறிட்டு வெளியேறியது .

சில நாட்களாக சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென்று நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது . பள்ளி மாணவர்கள் அந்த செயற்கை நீர்வீழ்ச்சியில் விளையாடினர்.தண்ணீர் வீணாவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com