புற்றுநோயாளிகளுக்கு தலைமுடியை தானமாக வழங்கிய சிறுவன்

பெரும்பாலும் பெண்கள் பலர் தலைமுடியை தானமாக வழங்க முன்வருகின்றனர்.சிறுவன் ஒருவர் தானமாக வழங்கியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவிநாசி :

புற்றுநோயாளிகளுக்கு பலர் தங்களது தலைமுடிகளை தானமாக வழங்கி வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் பலர் தலைமுடியை தானமாக வழங்க முன்வருகின்றனர். இந்தநிலையில் பெண்கள் மட்டும் தான் தானம் கொடுக்க முடியுமா?

நானும் கொடுப்பேன் என்று, அழகாக தலைமுடியை வளர்த்து, சிறுவன் ஒருவர் தானமாக வழங்கியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.அவிநாசி சேவூர் ரோடு, வ.உ.சி., காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜய் ஆனந்த்.இவரது மனைவி சங்கீதா. இவர்கள் மகன் இறை எழில்பரிதி, நீளமாக தலைமுடியை வளர்த்து புற்றுநோயால்பாதித்தவர்களுக்கு, விக் தயாரிப்பதற்காக முடியை தானம் வழங்கியுள்ளார். முடிதானம் செய்த சிறுவனை அவிநாசி கிழக்கு ரோட்டரி நிர்வாகிகள் உட்பட பலர் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com