வெள்ளகோவிலில் ரூ.13 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்

விவசாயிகள் 28 ஆயிரத்து 580 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.50.94க்கும், குறைந்தபட்சம் ரூ.45.69க்கும் கொள்முதல் செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.நேற்று வியாழக்கிழமை 29 விவசாயிகள் கலந்து கொண்டு 28 ஆயிரத்து 580 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 9 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.50.94க்கும், குறைந்தபட்சம் ரூ.45.69க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.13லட்சத்து 82ஆயிரத்து 962க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com