தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

தாயார் இறந்த துக்கம் தாங்காமல் வேதனையில் இருந்த ஜெகதீஷ் சோகமாகவே இருந்துள்ளார். விவசாயத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை ஜெகதீஷ் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி காளிநாதன்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ஜெகதீஷ்(வயது 25) . இவரது தாயார் அங்காத்தாள். இந்தநிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் அங்காத்தாள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

தாயார் இறந்த துக்கம் தாங்காமல் வேதனையில் இருந்த ஜெகதீஷ் சோகமாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், விவசாயத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை ஜெகதீஷ் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com