சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா ஆலோசனை கூட்டம் - பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

தேரோட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது. ஆலோசனை கூட்டம் மலை மீதுள்ள மண்டப கூட்ட அரங்கில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கயம் :

காங்கயம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள், சுகாதார வசதிகள், பஸ் வசதிகள் போன்றவை குறித்த ஆலோசனை கூட்டம் மலைமீதுள்ள மண்டப கூட்ட அரங்கில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளார்கள். இதில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் அன்னக்கொடி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com