மின்கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசு மக்களை திணற வைக்கிறது. கைகளில் சிமினி விளக்கேந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கைகளில் சிமினி விளக்கேந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில்காணலாம்.
கைகளில் சிமினி விளக்கேந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில்காணலாம்.
Published on

திருப்பூர் :

மின்கட்டண உயர்வை கண்டித்துஎஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சிமினி விளக்கேந்தி திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பசீர் அகமது தலைமை தாங்கினார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா வரவேற்றார். தி.மு.க. அரசின் மக்களை திணற வைக்கும் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தக்கோரியும், மின்கட்டண உயர்வு முடிவை கைவிடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் சேக் அலாவுதீன் கோரிக்கை குறித்து பேசினார்.மாவட்ட பொதுச்செயலாளர் இதாயத்துல்லா, தொழிற்சங்க தலைவர் முஜிபுர் ரகுமான், பெண்கள் அணி மாவட்ட தலைவர் பாத்திமா முஸ்தபா, மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் சிமினி விளக்கேந்தி கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com