பின்னலாடை துறைக்கு தனி வாரியம் - எம்ப்ராய்டர்ஸ் அசோசியேஷன் வலியுறுத்தல்

24ம் ஆண்டு மகாசபை கூட்டம் ஓட்டலில் நடந்தது.பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டர்ஸ் அசோசியேஷன், 24ம் ஆண்டு மகாசபை கூட்டம் ஓட்டலில் நடந்தது.கூட்டத்துக்கு அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பனியன் தொழிலாளருக்கு விடுதி, கல்வி வசதியை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வலியுறுத்துவது, மின் கட்டண உயர்வை கைவிட அரசை வலியுறுத்துவது, பல்வேறு கோரிக்கைகளை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் பார்வைக்கு வைப்பது, சணல், தேங்காய் வாரியம் இருப்பது போல் பின்னலாடைக்கென வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் நிர்வாகி சிவக்குமார் மின் இயக்க சாதனங்கள் அவற்றின் பாதுகாப்பான செயல்பாடுகள் குறித்தும், ஆடிட்டர் அரசப்பன் மத்திய, மாநில அரசுகளின் மானியம், சலுகை குறித்தும் பேசினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com