பல்லடம் அருகே புதிய ரேஷன் கடை கட்டிடம் செல்வராஜ் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது. ஆலூத்து பாளையத்திற்கு சரிவர பஸ் வசதி இல்லை என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பல்லடம் அருகே புதிய ரேசன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை செல்வராஜ் எம்.எல்.ஏ., வழங்கிய போது எடுத்த படம்.
பல்லடம் அருகே புதிய ரேசன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை செல்வராஜ் எம்.எல்.ஏ., வழங்கிய போது எடுத்த படம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்துபாளையத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்து, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் எம்.எல்.ஏ.,திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம்,மற்றும் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், முன்னாள் நகராட்சி தலைவர் பி.ஏ. சேகர், வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன், துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் உதயகுமார், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரேஷன் கடை திறப்பு விழா முடிந்ததும் செல்வராஜ் எம்.எல்.ஏ.,விடம் ஆலூத்து பாளையத்திற்கு சரிவர பஸ் வசதி இல்லை என்றுகோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com