அறிவியல் கண்காட்சி போட்டி - விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவர்களின் படைப்புகளுக்கு முதல் பரிசு

செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சி விழாவில் கலந்துகொண்டனர். பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பரிசுகளை வழங்கினார்
பரிசு பெற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.
பரிசு பெற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சி விழாவில் கலந்துகொண்டு தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்தனர். இதில் விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றனர். பரிசு பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பரிசுகளை வழங்கினார்.

விழாவில் செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், பள்ளியின் முதல்வர் அனிதா ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com