பல்லடம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

விநாயக பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான்.
Published on

பல்லடம்:

பல்லடம் வட்டாரத்தில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு, பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், அங்காளம்மன்கோவில், பொன்காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், வடுகபாளையம் சக்தி விநாயகர் கோவில், சந்தைபேட்டை கோட்டை விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சங்கடகர சதுர்த்தி பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப்பெருமானை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com