தொடர் மழையால் திருப்பூரில் சேறும் சகதியுமாக மாறிய சாலைகள்

நேற்றிரவு 8 மணி முதல் 11 மணி வரை பரவலாக மழை பெய்தது.தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்றிரவு 8 மணி முதல் 11 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. ஏற்கனவே மழையால் சாலைகள் சிதலமடைந்து இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் மேலும் சேதமடைந்தன. பல இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.

மழையின் காரணமாக தீபாவளி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்தனர். குறிப்பாக தரைக்கடை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com