பொள்ளாச்சி சாலையில் தடுப்புகள் அகற்றப்பட்டதால் விபத்து ஏற்படும் அபாயம்

போக்குவரத்து காவல்துறை சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டன. விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
Published on

உடுமலை :

உடுமலை பொள்ளாச்சி சாலையில் கணபதிபாளையம் பிரிவு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு் உயிரிழப்புகள் நிகழ்ந்து வந்த வந்த அதனை தடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் அதி வேகமாக வரும் வாகனங்கள் இப்பகுதியில் வரும் போது வேகத்தை குறித்து சென்று வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலைநில் தற்போது திடிரென்று தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. இதனால் அந்த மீண்டும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் சாலை தடுப்புகளை அமைத்து விபத்து பகுதி என அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com