பொது தகவல் அலுவலா் பெயா் பலகை வைக்க கோரிக்கை

ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் மாவட்டத் தலைவா் கலெக்டரிடம் மனு அளித்தார்.பெயா், முகவரி கொண்ட பெயா் பலகை வைக்க வேண்டும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரபாண்டியன் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி பொது தகவல் அலுவலா் மற்றும் மேல்முறையீட்டு அலுவலரின் பெயா், முகவரி கொண்ட பெயா் பலகை வைக்க வேண்டும்.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் பொதுதகவல் அலுவலா், மேல் முறையீட்டு அலுவலா் விபரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com