ஜல்லிக்கற்கள் பெயர்ந்துக் கிடக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை

சீனிவாசா நகரில் 100-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கற்கள் பெயர்ந்துக் கிடக்கும் சாலையை படத்தில் காணலாம்.
ஜல்லிக்கற்கள் பெயர்ந்துக் கிடக்கும் சாலையை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி சீனிவாசா நகரில் 100-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. தினமும் 300-க்கு மேற்பட்ட வாகனங்கள்அந்த வழியாக வந்து செல்கின்றன. இந்தநிலையில் அங்கு உள்ள முக்கிய ரோடு பராமரிப்பின்றி ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் ஓட்டுவதற்கு இடையூறாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டுமென கணபதிபாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com