மின்வாரிய அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

ஒவ்வொரு மின் அலுவலகத்திலும், ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன. உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, கோவை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர், வீரபாண்டி மின் உப கோட்டத்துக்கு உட்பட்டு ஆண்டிபாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலக உதவி மின் பொறியாளர், 15 கி.மீ., தூரத்தில் உள்ள முதலிபாளையம், காசிபாளையம் மின் அலுவலகத்தை கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.

இடுவம்பாளையம் மின் அலுவலக உதவி மின் பொறியாளர், சின்னக்கரை மற்றும் கூடுதலாக சில மின் அலுவலகங்களை கவனிக்கவேண்டியுள்ளது. முருகம்பாளையம் உதவி மின் பொறியாளர், கரைப்புதூர் உட்பட துணை மின்நிலையங்களையும் கூடுதலாக கவனிக்கிறார்.

ஒவ்வொரு மின் அலுவலகத்திலும், ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன. கூடுதல் அலுவலகங்களை கவனிக்கவேண்டியுள்ளதால், மின் வாரிய அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. மின் கணக்கீட்டாளர், பணம் வசூலிப்போரும் குறைவாகவே உள்ளனர். இதனால் மின் நுகர்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

வீரபாண்டி மின் உப கோட்டத்துக்கு உட்பட்ட உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என கூறியிருந்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com