

திருப்பூர் :
கடந்த ஆண்டு ஜனவரி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது முதல் கோவேக்ஷின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகிய பின் பெண்கள் தடுப்பூசி மையத்துக்கு வர துவங்கினர்.
திருப்பூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சத்து 627 ஆண்களுக்கும், 18 லட்சத்து 63 ஆயிரத்து 399 பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 60 வயதை கடந்த 4.99 லட்சம் பேருக்கும், அதிகபட்சமாக 18 வயதை கடந்த 22.55 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 1.74 லட்சம் பேர் மட்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.சுகாதாரத்துறையினர் கூறுகையில், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர் பலர் இன்னமும் இரண்டாவது தவணை செலுத்தாமல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் செலுத்தாமல் உள்ளனர்.நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும். வரும் முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.