விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக ஆர். சுகுமார் நியமனம்

தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் நடிகர் விஜய் ஒப்புதலுடன் நியமனம் செய்து வருகின்றனர்.என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக ஆர்.சுகுமார்.
மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக ஆர்.சுகுமார்.
Published on

திருப்பூர் :

தமிழக முழுவதும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக மாவட்டத்தை தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் மற்றும் அணி வாரியாக தலைவர்கள், நிர்வாகிகளை நடிகர் விஜய் ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்து வருகிறார்.

அதன்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் பரிந்துரையின் பேரில் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக ஆர்.சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இளைஞர் அணி செயலாளராக கோல்டு பாண்டி, துணைத்தலைவராக தினேஷ், துணைச் செயலாளராக அப்பாஸ், பொருளாளராக சண்முகம், இணைச் செயலாளர்களாக வசந்த், எம்.எஸ்.கே., மாவட்ட நிர்வாகி மகேந்திரன், கவுரவ ஆலோசகர் லோகு, மாவட்ட பிரதிநிதி சிவா, ஆலோசகர்கள் மோகன், தீபக், ஹரி, அஸ்வின் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.சுகுமார்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது 23 வருட மக்கள் இயக்க பணியை மதித்து என்னை திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக நியமனம் செய்த தளபதி விஜய் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கும் பரிந்துரை செய்த தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மக்கள் இயக்கத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு பதவி வழங்கிய தலைமைக்கு என்றென்றும் கட்டுப்பட்டு இயக்கத்தை வலுப்படுத்த உண்மையாக உழைப்பேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com