பல்லடம் புறவழிச்சாலை திட்டத்தை விரைவில் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் - சமூக ஆர்வலர்கள் அறிவிப்பு

பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

 பல்லடம் :

பல்லடம் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பில் பல்லடம் கிராம சாலைகள் உதவி பொறியாளர் பழனிகுமாரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் கூட அவசரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. புறவழிச் சாலை திட்டப்பணி அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும், புறவழிச் சாலை திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய திட்டத்தை கிடப்பில் போட்டு வருவதை ஏற்க முடியாது. அடுத்த 10 நாட்களுக்குள் புறவழிச் சாலை திட்டத்தை துவங்காவிட்டால்,பொதுமக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com