மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் த.மா.கா., ஆர்ப்பாட்டம்

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை 14 பைசா முதல் 21 பைசா வரை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும்.
மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம்  முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில்  பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.   
மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.   
Published on

திருப்பூர் :

தமிழக அரசு சமீபத்தில் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை 14 பைசா முதல் 21 பைசா வரை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

'இந்நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மது கடைகளை மூடுவதாக மக்களிடம் தெரிவித்து மது கடைகளை மூடினால் தமிழக அரசின் வருவாய் பாதிக்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல், அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com