பல்லடம் போலீசார் இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
பல்லடம் போலீசார் இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

நிலத்தை அளவீடு செய்ய வந்த வங்கி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு

கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த தனபால் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் மற்றும் வட்டி முறையாக செலுத்தாததால் நிலத்தை ஏலம் விடுவதாக வங்கி நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.

தகவல் அறிந்து இடத்தின் உரிமையாளர் தனபால் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இடத்திற்கு அளவீடு செய்ய செல்வதற்கு வழித்தடம் இல்லாததால் அருகே உள்ள இடத்தின் வழியாக சென்று வங்கி நிர்வாகத்தினர் அளவீடு செய்ய முயன்றனர். அதற்கு அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வழித்தடத்திற்கு உரிய ஆவணங்கள் கொண்டு வருவதாக வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்க பட்டதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com